தேசிய செய்திகள்

பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும்: அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல் + "||" + Economic slowdown | SBI projects creation of 16 lakh less jobs in FY20

பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும்: அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும்: அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும் என்றும், அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறை ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் சேமநல நிதி நிறுவன தகவல்படி 2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் 89.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் பெறும் இந்த தொழிலாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவார்கள். இதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் வராது.


20-21-ம் நிதி ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும். எனவே இந்த நிதி ஆண்டில் சுமார் 15.8 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும். தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளிலும் 39 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சில்லறை பணவீக்கம் 7.35% உயர்ந்து உள்ளது -பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது
6 ஆண்டுகள் இல்லாத அளவு சில்லறை பணவீக்கம் 7.35% ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது.
2. 2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிப்பு
2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் - சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்
பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என சீதாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.
4. கடந்த 19 மாதங்களில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் மிகக் குறைவு
கடந்த 19 மாதங்களில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் மிகவும் குறைந்து உள்ளது.
5. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தால்தான் பொருளாதார மந்தநிலை மாறும் - சீத்தாராம் யெச்சூரி சொல்கிறார்
வாங்கும் சக்தியை அதிகரித்தால்தான் பொருளாதார மந்தநிலை மாறும் என சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.