தேசிய செய்திகள்

திமுகவுடன் மோதல் : தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சோனியா காந்தியுடன் திடீர் சந்திப்பு + "||" + Conflict with DMK   Tamilnadu Congress leader Alagiri Sudden encounter with Sonia Gandhi

திமுகவுடன் மோதல் : தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சோனியா காந்தியுடன் திடீர் சந்திப்பு

திமுகவுடன் மோதல் : தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சோனியா காந்தியுடன் திடீர் சந்திப்பு
திமுகவுடன் மோதல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சோனியா காந்தியை சந்தித்து விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி  காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான திமுக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த  பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே தமிழக காங்கிரசுக்கும் - திமுகவுக்கும் இடையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மனக்கசப்பு உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் பதவிகள் வழங்குவதில் திமுக கட்சியினர் கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில்  குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

இதைத் தொடர்ந்துதான் சோனியாகாந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது என கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு  சோனியா காந்தி திடீர் அழைப்பு விடுத்து இருந்தார். இதைத் தொடர்ந்து டெல்லியில் அழகிரி சோனியா காந்தியை சந்தித்து  பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர்  விளக்கினார் என கூறப்படுகிறது. தமிழக அரசியல் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இன்று மாலை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது.
2. இஸ்லாமியர்கள் எதிர்க்கட்சிகளுக்கு இஸ்லாமியராக தெரிந்தாலும் எங்களுக்கு இந்தியர்களே- பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகள் குடிமக்களை மதத்தின் அடிப்படையில் பார்க்கிறார்கள். நாங்கள் வேறுபட்டவர்கள். அனைவரையும் நாங்கள் இந்தியர்களாகவே பார்க்கிறோம் என பிரதமர் கூறினார்.
3. உள்ளாட்சி தேர்தல் வெற்றி இன்டர்வல் தான்...சட்டமன்ற தேர்தல் தான் கிளைமேக்ஸ் - உதயநிதி ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தல் வெற்றி இன்டர்வல் தான்...சட்டமன்ற தேர்தல் தான் கிளைமேக்ஸ் என உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
4. திமுகவில் உட்கட்சி தேர்தல் வருகிற 21ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு
திமுகவில் உட்கட்சி தேர்தல் வருகிற 21ஆம் தேதி முதல் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5. திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த டி.எம்.செல்வகணபதிக்கு பதில் வீரபாண்டி ராஜா
திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.