சில்லறை பணவீக்கம் 7.35% உயர்ந்து உள்ளது -பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது


சில்லறை பணவீக்கம் 7.35% உயர்ந்து உள்ளது -பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது
x
தினத்தந்தி 14 Jan 2020 6:52 AM GMT (Updated: 14 Jan 2020 8:25 AM GMT)

6 ஆண்டுகள் இல்லாத அளவு சில்லறை பணவீக்கம் 7.35% ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது.

மும்பை

சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத  வகையில் மிக  உயர்வான 7.35 சதவீதமாக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து உள்ளது. இது 2014 முதல் நரேந்திர மோடி அரசாங்கத்தில் கண்ட மிக உயர்ந்த சில்லறை பணவீக்கம் ஆகும்.

உணவு விலைகள் கணிசமாக உயர்ந்து, தொலைத் தொடர்பு கட்டண உயர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.54 சதவீதத்திலிருந்து டிசம்பர் மாதத்தில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சில்லறை பணவீக்கம் அதிகாரப்பூர்வமாக நுகர்வோர் விலைக் குறியீடு என்று அழைக்கப்படுகிறது. இது ரிசர்வ் வங்கியின் அளவான 6  சதவீதத்தை தாண்டி உள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்தில் மத்திய வங்கிக்கு வட்டி விகிதங்களைக் குறைப்பதை இது தடுக்கக்கூடும்.

அதிக பணவீக்கம், குறைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வேலையின்மை ஆகியவற்றுடன், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைத் தவிர்க்க முடியாத  தேக்க நிலைமைக்கு தள்ளியுள்ளது.

டிசம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் உயர்ந்தது. விலையுயர்ந்த காய்கறிகளால் உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் 15 சதவீதம் விலை உயர்ந்துள்ளன.

Next Story