தேசிய செய்திகள்

கேளிக்கை விடுதியில் ஆபாச நடனமாடிய 21 இளம்பெண்கள் : விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் + "||" + Police Raid Pub In Hyderabad, Take 21 Girls Into Custody

கேளிக்கை விடுதியில் ஆபாச நடனமாடிய 21 இளம்பெண்கள் : விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ்

கேளிக்கை விடுதியில் ஆபாச நடனமாடிய 21 இளம்பெண்கள் : விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ்
ஐதராபாத்தில் பிரபல கேளிக்கை விடுதியில் ஆபாச நடனம் ஆடிய 21 இளம்பெண்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ஐதராபாத்,

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கிளப் ஒன்றில் இளம் பெண்களை வைத்து ஆபாச நடனம்  நடத்தப்படுவதாக ஜூப்ளி ஹில்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் கிளப்பில் நடந்துகொண்டிருந்த ஆபாச நடனத்தை நிறுத்தி, நடனமாடிய 21 இளம்பெண்களை ஜுப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

காவல்நிலையத்தில் இளம் பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கேளிக்கை விருந்து ஒன்றுக்காக தங்களை பிரசாத் என்பவர் கிளப்புக்கு அழைத்து வந்து நடனமாட வைத்ததாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் போலீஸ் வரும் தகவலை முன்னதாகவே அறிந்த கிளப் உரிமையாளரும், அந்த கிளப்பை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்து கேளிக்கை விருந்து நடத்திய பிரசாத் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்ட 21 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.