ரிசா்வ் வங்கி புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேபப்ரதா பத்ரா நியமனம்


ரிசா்வ் வங்கி புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேபப்ரதா பத்ரா நியமனம்
x
தினத்தந்தி 14 Jan 2020 5:00 PM GMT (Updated: 14 Jan 2020 5:03 PM GMT)

ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக, மைக்கேல் தேபப்ரதா பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

ரிசா்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கேல் தேபப்ரதா பத்ரா, 3 ஆண்டுகள் துணை ஆளுநர் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா தன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக இருந்த அவருடைய இடத்துக்கு, மைக்கேல் தேபப்ரதா பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதிக் கொள்கை துறையில் தற்போது நிர்வாக இயக்குனராக இருக்கும் பத்ரா, ரிசர்வ் வங்கியின், நான்காவது துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதிக் கொள்கை துறையை தொடர்ந்து பத்ராவே நிர்வகித்து வருவார். இதற்கு முன், விரால் ஆச்சார்யா இந்த துறையை, துணை ஆளுநராக இருந்த போது கவனித்து வந்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், அதிகபட்சம் நான்கு துணை ஆளுநர்களை கொண்டிருக்கலாம்.

Next Story