தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு + "||" + Delhi Assembly Election: AAP releases list of candidates

டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டது.
புதுடெல்லி,

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ம் தேதி முடிவடைகிறது. இதன்படி டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அங்கு ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.


இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லியின் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டது.

புதுடெல்லி தொகுதியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடுகிறார். திமார்புர் தொகுதியில் பாண்டேவும், கல்காஜி தொகுதியில் அதிஷியும், ராஜேந்திரா நகர் தொகுதியில் சதாவும் போட்டியிட உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. தற்போது பதவியில் உள்ள 15 எம்.எல்.ஏ.க்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி சட்டபேரவைக்கான தேர்தல் ஒரு கட்டமாக நடைபெற உள்ளது. மேலும் வாக்குப்பதிவு பிப்ரவரி 8-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி வன்முறை: உளவுத்துறை அதிகாரி மரணம் ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் மீது கொலை வழக்கு
டெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2. டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி: கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. டெல்லி சட்டசபை தேர்தல்; ஆம் ஆத்மி-32, பா.ஜ.க.-16 முன்னிலை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
4. டெல்லி சட்டசபை தேர்தல்; 5 மணி நிலவரப்படி 44.52 சதவீத வாக்குகள் பதிவு
டெல்லி சட்டசபை தேர்தலில் 5 மணி நிலவரப்படி 44.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
5. டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
டெல்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.