தேசிய செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு: பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை + "||" + Essential Commodity Prices: PM Modi should convene all party meeting Request of Congress

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு: பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு: பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைமை செய்திதொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறியதாவது:-

உணவு பொருட்களின் விலைகள் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து இருக்கிறது. இதனால் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி இதில் மவுனமாக இருப்பது ஏன்?


கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு 2019 டிசம்பரில் சில்லறை பணவீக்கம் 7.35 சதவீதமாக அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குறிப்பாக காய்கறிகள் விலைகள் அதிகரிப்பாலும், வெங்காயம் விலை அதிகரிப்பாலும் இந்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிரதமர் மோடி பிரிவினை அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறார். நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை தீர்ப்பதில் அவர் அக்கறை செலுத்துவதில்லை. பணவீக்கத்தை ஒரு மாதத்தில் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து அவர் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பிரதமர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும். 30 அல்லது 60 நாட்களுக்குள் இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.