பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்திப்பு


பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்திப்பு
x
தினத்தந்தி 15 Jan 2020 2:32 PM GMT (Updated: 15 Jan 2020 2:32 PM GMT)

டெல்லியில் பிரதமர் மோடியை ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்தித்தார்.

புதுடெல்லி,

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச அரசியல் குறித்த ரெய்சினா மாநாடு டெல்லியில் நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் 7 நாடுகளின் முன்னாள் பிரதமர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் உலகளாவிய சவால்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். 

தொடர்ந்து, 100 நாடுகளில் இருந்து 700 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஈரான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும்  இம்மாநாட்டில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இன்று  பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். மோடியுடனான சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் முக்கிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ரஷ்யா வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ்வை தொடர்ந்து  ஈரான் வெளியுறவுத்துறை  மந்திரி ஜவாத் சரீஃப்பும் பிரதமர் மோடியை சந்தித்தார்.

Next Story