முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு: தனவேலு எம்.எல்.ஏ சஸ்பெண்ட்


முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு: தனவேலு எம்.எல்.ஏ சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 16 Jan 2020 4:53 AM GMT (Updated: 16 Jan 2020 4:53 AM GMT)

முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு கூறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

புதுச்சேரி

புதுவை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான தனவேலு கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரவை மீது கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கினார். இதுபற்றி சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவிக்குமாறு அவரை கவர்னர் கிரண்பெடி  அறிவுறுத்தினார். கட்சியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக செயல்படும் தனவேலு எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கைக்கு அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

கட்சி மேலிடத்திடம் தெரிவித்து தனவேலு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் தெரிவித்தனர். இதையொட்டி அவர்கள் டெல்லி சென்று தலைமையிடம் முறையிட்டனர்.

இந்த நிலையில், தன்வேலு எம்.எல்.ஏ கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். 7 நாட்களுக்குக்குள் தனவேலு விளக்கம் தரவேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம்  நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Next Story