தேசிய செய்திகள்

மாநில போக்குவரத்து மந்திரிகளுக்கு நிதின் கட்காரி வேண்டுகோள் + "||" + Nitin Gadkari appeals to state transport ministers

மாநில போக்குவரத்து மந்திரிகளுக்கு நிதின் கட்காரி வேண்டுகோள்

மாநில போக்குவரத்து மந்திரிகளுக்கு நிதின் கட்காரி வேண்டுகோள்
சாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில போக்குவரத்து மந்திரிகளுக்கும் மத்திய மந்திரி நிதின்கட்காரி வேண்டுகோள் விடுத்தார்.

புதுடெல்லி, 

தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சிலின் 18–வது கூட்டமும், போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சிலின் 39–வது கூட்டமும் நேற்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி தலைமை தாங்கினார். அனைத்து மாநில போக்குவரத்து மந்திரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிதின்கட்காரி பேசியதாவது:–

சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஒரு கூட்டு முயற்சி எடுக்க வேண்டும். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வருகிற நாட்களில் சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு போதுமான நிதி ஆதாரம் உள்ளது. இதில் எந்த பற்றாக்குறையும் இல்லை. எனவே செலவை பற்றி கவலைப்படாமல் சாலை பாதுகாப்புக்காக அனைத்து மாநில துறைகளும் இணைந்து ஒரு திட்டத்தை தயாரிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு சேவையாற்ற அனைத்து மாநிலங்களுக்கும் ஒத்துப்போகிற ஒரு அணுகுமுறை மட்டுமே இப்போதைய தேவையான உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 36 சதவீத முன்னேற்றமும், மாநில நெடுஞ்சாலைகளில் 26 சதவீத முன்னேற்றமும் ஏற்படும் வகையில் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அவற்றை பழுதுபார்க்கும் பணிகள் விரைவாக நடைபெற வேண்டும்.

சாலைகளை ஆய்வு செய்யும் பணிகளில் அரசுசாரா தொண்டு நிறுவனங்களையும், பொறியியல் மாணவர்களையும் ஈடுபடுத்த வேண்டும். சாலை பொறியியலை மேம்படுத்துவதற்கு ரூ.14 ஆயிரம் கோடியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்.
2. பழனி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
பழனி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்.
3. துணை ஜனாதிபதி நாளை வருகை: புதுவையில் பாதுகாப்பு ஒத்திகை டி.ஜி.பி. தலைமையில் நடந்தது
துணை ஜனாதிபதி நாளை வருவதையொட்டி புதுவையில் போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
4. சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் பேட்டி
சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் கூறினார்.