தேசிய செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு - மத்திய அரசு + "||" + India to invite Imran Khan for Shanghai Council meet

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு - மத்திய அரசு

ஷாங்காய் ஒத்துழைப்பு  மாநாட்டிற்கு  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு - மத்திய அரசு
டெல்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி

டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார்  கூறியதாவது:-

ஷாங்காய் அமைப்பில் உள்ள 8 உறுப்பு நாடுகள் மற்றும் 4 பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனாவின் உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் எழுப்ப முயன்றதை சுட்டிக்காட்டிய ரவீஷ்குமார், இது போன்ற நடவடிக்கையை சீனாவும், பாகிஸ்தானும் எதிர் காலத்தில் தவிர்க்க வேண்டும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏதேனும் ஒரு விவகாரம் விவாதிக்கப்பட வேண்டுமானால், அது இருதரப்பு ரீதியாக விவாதிக்கப்பட வேண்டும் என்ற செய்தி பாகிஸ்தானுக்கு சத்தமாகவும், தெளிவாகவும் சென்றுள்ளது என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை - மத்திய இணை அமைச்சர்
கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்து உள்ளார்.
2. குல்பூஷண் ஜாதவ் வழக்கு : பாகிஸ்தான் அவசர சட்டம் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு தொடர்பாக அவசர சட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் நீட்டித்துள்ளது.
3. பாகிஸ்தானில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐந்து மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
4. இந்தியா- சீனா மாஸ்கோ 5 அம்ச கூட்டு அறிக்கை காகித பேச்சாக முடிவடையும்: சீன அரசு ஊடகம் சொல்கிறது
இந்தியா சீனா எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் 5 அம்ச திட்ட கூட்டு அறிக்கை காகித பேச்சாக முடிவடையும்: என சீன அரசு ஊடகம் சொல்கிறது
5. படைகளை குவிக்கும் சீனா;இந்திய நிலப்பரப்பை எந்த விலை கொடுத்தும் பாதுகாக்க இராணுவம் தளபதிகளுக்கு கட்டளை
எல்லை பகுதியில் படைகளை குவித்து வரும் சீன ராணுவம் இந்திய நிலப்பரப்பை ‘எந்த விலை கொடுத்தும் பாதுகாக்க இராணுவம் தளபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.