டெல்லி சட்டசபை தேர்தல்: 57 தொகுதிகளுக்கான பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


டெல்லி சட்டசபை தேர்தல்: 57 தொகுதிகளுக்கான பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 17 Jan 2020 5:54 PM GMT (Updated: 17 Jan 2020 5:54 PM GMT)

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 57 தொகுதிகளுக்கான பா.ஜனதா கட்சியின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அங்கு ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் 57 தொகுதிகளில் போட்டியிடும் முதல் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜனதா இன்று வெளியிட்டது.

இதன்படி மாடல் டவுன் தொகுதியில் கபில் மிஷ்ராவும், ரோகிணி தொகுதியில் விஜேந்தர் குப்தாவும், ஷாலிமார் பாக் தொகுதியில் ரேகா குப்தாவும், சாந்தினி சவுக் தொகுதியில் சுமன் குமார் குப்தாவும் போட்டியிட உள்ளனர். மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story