டெல்லி சட்டசபை தேர்தல்; 54 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் முதல் பட்டியல் வெளியீடு


டெல்லி சட்டசபை தேர்தல்; 54 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் முதல் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 18 Jan 2020 4:32 PM GMT (Updated: 18 Jan 2020 4:32 PM GMT)

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான 54 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  வருகிற பிப்ரவரி 8ந்தேதி சட்டசபைக்கான தேர்தல் டெல்லியில் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.  இந்நிலையில், காங்கிரஸ் கட்சி 54 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது.

இதன்படி, முன்னாள் மத்திய மந்திரி கிருஷ்ணா தீரத், பட்டேல் நகரில் இருந்தும், முன்னாள் டெல்லி மந்திரி அரவிந்தர் லவ்லி காந்தி நகரில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரான ஆல்கா லம்பா, சாந்தினி சவுக் பகுதியில் போட்டியிடுகிறார்.  இதேபோன்று தேர்தல் பிரசார குழு தலைவர் கீர்த்தி ஆசாத்தின் மனைவி பூனம் ஆசாத் சங்கம் விஹார் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

Next Story