தேசிய செய்திகள்

ஒடிசாவில் 4 வயது சிறுமி கற்பழிப்பு; தொழில் பாதுகாப்பு படை வீரர் கைது + "||" + 4-year-old girl raped in Odisha: Armed security guard arrested

ஒடிசாவில் 4 வயது சிறுமி கற்பழிப்பு; தொழில் பாதுகாப்பு படை வீரர் கைது

ஒடிசாவில் 4 வயது சிறுமி கற்பழிப்பு; தொழில் பாதுகாப்பு படை வீரர் கைது
ஒடிசாவில் 4 வயது சிறுமி கற்பழிப்பு சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த தொழில் பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார்.
பாரதீப்,

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் பாரதீப் என்ற இடத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் தமிழகத்தை சேர்ந்தவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமைக்காவலராக பணியாற்றி வருகிறார்.


இந்த நிலையில் தன்னுடன் பணியாற்றி வரும் சக வீரரின் 4 வயது மகளை சாக்லெட் தருவதாகக்கூறி அவர் தனது குடியிருப்புக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றார். பின்னர் அந்த சிறுமியை கற்பழித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று தமிழக வீரரை கைது செய்தனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 8 பெட்டிகள் கழன்று ஓடின
ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 8 பெட்டிகள் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஒடிசா மிருகக்காட்சி சாலையில் வைரஸ் தாக்குதலுக்கு 4 யானைகள் சாவு
ஒடிசா மிருகக்காட்சி சாலையில் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 4 யானைகள் உயிரிழந்தது.
3. ஒடிசாவில் வெளிநாட்டுக்காரர் மகன்களுடன் கொலை: 20 வருடங்களுக்கு பின்னர் குற்றவாளி கைது
ஒடிசாவில் வெளிநாட்டுக்காரர் மகன்களுடன் கொலை செய்யப்பட்ட வழக்கில், 20 வருடங்களுக்கு பின்னர் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.