தேசிய செய்திகள்

காரில் 2 நாட்களாக மனைவியை பூட்டி வைத்துவிட்டு கணவர் மாயம் + "||" + After locking his wife in the car for 2 days, her husband's missing

காரில் 2 நாட்களாக மனைவியை பூட்டி வைத்துவிட்டு கணவர் மாயம்

காரில் 2 நாட்களாக மனைவியை பூட்டி வைத்துவிட்டு கணவர் மாயம்
காரில் 2 நாட்களாக மனைவியை பூட்டி வைத்துவிட்டு கணவர் மாயமான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
இடுக்கி,

கேரள மாநிலம், அடிமாலி அருகே கல்லார்க்குட்டி பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அந்த ‘பங்க்’ அருகில் ஒரு கார் 2 நாட்களாக தனியாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று பார்த்தபோது காரின் உள்ளே பெண் ஒருவர் இருந்தார்.


சோர்வாக இருந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த பெண்ணின் பெயர் லைலாமணி என்று தெரியவந்தது. பின்னர் அவரிடம் விசாரித்ததில் அவரும், கணவர் மேத்யூவும் வியாழக்கிழமை அங்கு வந்ததாகவும், காரை பூட்டிவிட்டு இயற்கை உபாதையை கழிக்க சென்ற கணவர் திரும்பி வரவில்லை எனவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

அவர்களுக்கு சொந்த ஊர் வயநாடு மாவட்டம் தலப்புழா ஆகும். அங்கு இருந்த சொத்துகளை விற்றுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வந்து இருக்கிறார்கள். அவர்களின் மகன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். லைலாமணியிடம் விசாரிக்கும்போது முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொன்ற டாக்டர் தற்கொலை: காதலியும் உயிரை மாய்த்த சோகம்
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த டாக்டர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த கள்ளக்காதலியும் தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
2. தலையில் கல்லை போட்டு இளம்பெண் கொலை: காதலர் தினத்தில் வெளியே சென்று வந்ததால் கணவர் வெறிச்செயல்
காதலர் தினத்தன்று வெளியே சென்று வந்த மனைவியை, தலையில் கல்லை போட்டு கணவரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
3. 6 மாதங்களாக சாலையோரம் நிற்கும் சொகுசு கார்
குழித்துறை அருகே 6 மாதங்களாக சாலையோரம் நிற்கும் சொகுசு கார் பற்றி போலீசார் விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. தாராபுரம் அருகே, ஊராட்சி தலைவியின் இருக்கையில் அமர்ந்து டிக்-டாக் செய்த கணவர் - சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு
தாராபுரம் அருகே ஊராட்சி தலைவியின் இருக்கையில் அமர்ந்து டிக்-டாக் செய்த கணவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
5. திருவரங்குளம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி நண்பர் படுகாயம்
திருவரங்குளம் அருகே கார் கவிழ்ந்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயமடைந்தார்.