தேசிய செய்திகள்

முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட் + "||" + Happy to see Chief Minister Palanisamy working on the field - Venkaiah Naidu

முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட்

முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட்
முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லி,

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை தனது சொந்த ஊருக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் இணைந்து கொண்டாடினார். இதற்கிடையே அவர் தந்தி தொலைக்காட்சிக்கு சிலுவம்பாளையத்தில் உள்ள வயல்வெளிகளில் வைத்து பிரத்யேக பேட்டி அளித்தார். 

இந்த பேட்டியின் போது வயலில் இறங்கி வேலை செய்ததோடு, விவசாயம் தொடர்பான தனது அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றது.

இந்நிலையில் இது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழக முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. தனது ஆதாரமான விவசாயத்தை அவர் மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது.

முதல்வர் பழனிசாமி மக்களுக்கு ஊக்கம் தருகிறார். விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு
முதலமைச்சர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
2. தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
3. ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
4. உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
5. முதலமைச்சர் பழனிசாமி 19-ம் தேதி டெல்லி பயணம்
முதலமைச்சர் பழனிசாமி வரும் 19-ம் தேதி டெல்லி செல்கிறார்.