தேசிய செய்திகள்

ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு - தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் + "||" + Resistance to change from capital Amaravati in Andhra - Telugu Desam Party Struggle

ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு - தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்

ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு - தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்
ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
அமராவதி,

ஆந்திராவின் தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்ற ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதற்கான மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதற்காக அமராவதி அருகே முகாமிட்ட தெலுங்கு தேசம் கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். 

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு சில இடங்களில் போராட்டத்தின் போது வன்முறை நிகழ்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கட்சியின் கொடி நிறத்தில் அரசு அலுவலகங்களுக்கு வர்ணம் பூசுவதா? ஜெகன் மோகன் ரெட்டிக்கு பாஜக கண்டனம்
ஆந்திராவில் கட்சியின் கொடி நிறத்தில் அரசு அலுவலகங்களுக்கு வர்ணம் பூசுவதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.