தேசிய செய்திகள்

இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம் + "||" + IMF slashes India’s FY20 GDP growth projection to 4.8%

இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்

இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முந்தைய மதிப்பீடு 6.1 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாகக் குறையும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
புதுடெல்லி

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) இந்தியாவின் நிதியாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறித்த  முந்தைய மதிப்பீடு 6.1 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாகக் குறைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை ஐஎம்எஃப் வெளியிட்டது. அதில், நடப்பு நிதியாண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.9 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்ததை விட குறைவானதாகும், இதேபோல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 4.8 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வளர்ச்சி விகிதம் 6.1 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020-21 ஆம் ஆண்டில் 5.8% ஆகவும், 2021-22 ஆம் ஆண்டில் 6.5% ஆகவும் முன்னேற்றம் காணப்படுகிறது.

இந்தியா மற்றும் பிற வளர்ந்து வரும் சந்தைகளின் மந்தநிலை காரணமாக அதன் 2020 உலகளாவிய வளர்ச்சி கணிப்புகளை முந்தைய மதிப்பீட்டில்  3.4 சதவீதத்தில்  இருந்து   3.3 சதவீதமாக குறைத்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...