தேசிய செய்திகள்

பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம் + "||" + "Prepare For Attack On IMF, Gita Gopinath": P Chidambaram's Forecast

பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்

பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்
2019-2020-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியா  பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதனால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார தேக்க நிலையை சரி செய்ய மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

2019-2020-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%-க்கும் குறைவாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்து உள்ளது.  அதுமட்டுமில்லாமல் நம் நாட்டுடைய பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

ஆகையால் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி மந்திரி  நிர்மலா சீதாராமன் வெளியிடப்போகும் பட்ஜெட்டில் இதனை குறிக்கும் திட்டங்கள் இருந்தால் அது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு புத்துயிர் பெற்றது
ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றது
2. டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டுக்கு அனுமதி மறுத்துள்ளது வெட்கக்கேடானது - ப.சிதம்பரம்
டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கு கலாஷேத்ரா நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது வெட்கக்கேடானது என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
3. ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு: நாடு பயணித்துக் கொண்டிருக்கும் திசை அறிவிக்கும் அபாய ஒலி - ப.சிதம்பரம்
ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.
4. இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் எங்கும் பார்த்தது இல்லை - ப.சிதம்பரம்
இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் எங்கும் பார்த்தது இல்லை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
5. ஜே.என்.யூ. துணைவேந்தர் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டும் - ப.சிதம்பரம்
ஜே.என்.யூ. துணைவேந்தர் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.