தேசிய செய்திகள்

6ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு + "||" + Maharashtra; 5 including 2 teachers booked for gang raping class 6 girl

6ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு

6ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு
மராட்டியத்தில் 6ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,

மராட்டியத்தின் நான்டெட் நகரில் மரத்வாடா பகுதியில் அமைந்த பள்ளியொன்றில் 6ம் வகுப்பில் மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார்.  அவரிடம் கலாசார நிகழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்றை காட்டுகிறோம் என கூறி ஆசிரியர்கள் அறை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், மாணவிக்கு சிறார் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  இதில் காயமடைந்த மாணவியை பள்ளிக்கு அருகில் தூக்கி போட்டு விட்டு சென்றுள்ளனர்.  இதன் பின் மகளை தேடி வந்த பெற்றோர் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதில் அவர் தேறி வருகிறார்.

இந்த சம்பவம் பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவியின் தாயார் முதலில் புகார் தெரிவித்து உள்ளார்.  ஆனால், நடந்த குற்ற சம்பவம் பற்றி பேச கூடாது என அறிவுறுத்தியதுடன், போலீசாரிடம் புகார் அளிக்க கூடாது என்று கட்டாயப்படுத்தி உறுதிமொழி வாங்கி உள்ளனர்.

இதன்பின் நடந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் மாணவியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  2 ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் 3 கூட்டாளிகள் என 5 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பரமக்குடி-ராமநாதபுரம் சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு, மத்திய-மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
பரமக்குடி-ராமநாதபுரம் சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் முகமது ரஸ்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
2. ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: அண்ணன், 2 தம்பிகளுக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் அண்ணன், 2 தம்பிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
3. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்
திருச்சி அருகே தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
4. களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு
களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
5. ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.6¼ லட்சம் மோசடி டாக்டர் உள்பட 4 பேர் மீது வழக்கு
ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.6¼ லட்சம் மோசடி செய்த டாக்டர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.