மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடி திருமணம் நின்றது


மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடி  திருமணம் நின்றது
x
தினத்தந்தி 21 Jan 2020 8:18 AM GMT (Updated: 21 Jan 2020 11:09 AM GMT)

மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓடிப்போனதால் குஜராத்தில் ஒரு இளம் ஜோடி திருமணம் நின்றுபோனது.

சூரத்

குஜராத் மாநிலம் சூரத்  கட்டர்கம்  பகுதியைச் சேர்ந்தவர்  ராகேஷ்(வயது 48) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது),  ஜவுளி தொழிலதிபர். இவரது மகனுக்கும் நவ்ஸரி பகுதியை சேர்ந்த  வைர கைவினைஞர்  ஒருவரின் மகளுக்கும்  கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.  திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறுவதாக இருந்தது.

இருவீட்டாரும் அடிக்கடி பேசி நெருக்கமாகி உள்ளனர். இதில் மணமகனின் தந்தை ராகேசும், மணமகளின் தாயார் சுவாதி (வயது 46). (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இவர்கள் ஏற்கனவே  நண்பர்களக இருந்து உள்ளனர். இதனால் இன்னும் அன்பு அதிகமாகி உள்ளது. 

இந்த நிலையில்  கடந்த 10 ந்தேதி முதல் மணமகனின் தந்தை - மணமகளின் தாயும் அவர்களது வீட்டில் காணவில்லை . இருவரும் இணைந்து எங்கோ தலைமறைவாகி விட்டார்கள். இதனால்  மணமகன் - மணமகள் இரு  குடும்பங்களுக்கும்  மிகவும் சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து இரு குடும்பத்தினரும் போலீசில் புகார் அளித்து உள்ளனர். இதனால் தற்போது திருமணம் நின்று போய் உள்ளது.

இருவரும்  ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்திற்கு முன்பே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள். அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்து உள்ளனர். அப்போது தான் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வைர கைவினைஞரை சுவாதி திருமணம் செய்து உள்ளார். தற்போது இந்த ஜோடி தலைமறைவாகி விட்டது என அவர்களது உறவினர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.  

Next Story