பிரசவ வலியால் துடித்த பெண்ணை கட்டிலில் வைத்து 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்ற ராணுவ வீரர்கள்


பிரசவ வலியால் துடித்த பெண்ணை கட்டிலில் வைத்து 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்ற ராணுவ வீரர்கள்
x
தினத்தந்தி 22 Jan 2020 6:19 AM GMT (Updated: 22 Jan 2020 6:19 AM GMT)

பிரசவ வலியால் துடித்த பெண்ணை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் கட்டிலில் வைத்து 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிஜப்பூர்

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பதேதா என்ற கிராமப்பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் 85வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள  கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

பதேதா கிராமத்தின் அருகில் மருத்துவமனையோ, வாகனங்கள் செல்வதற்கு உரிய சாலை வசதிகளோ இல்லாததை அறிந்த பாதுகாப்புப் படை வீரர்கள் கர்ப்பிணியை கட்டிலில் அமர வைத்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.  மனிதநேயத்துடன் செயல்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Next Story