தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தல்; காங்கிரசில் குஷ்பூ-நக்மா உள்பட 40 நட்சத்திர பேச்சாளர்கள் + "||" + Delhi Assembly Election; 40 star speakers including Khushboo and Nagma in Congress

டெல்லி சட்டசபை தேர்தல்; காங்கிரசில் குஷ்பூ-நக்மா உள்பட 40 நட்சத்திர பேச்சாளர்கள்

டெல்லி சட்டசபை தேர்தல்; காங்கிரசில் குஷ்பூ-நக்மா உள்பட 40 நட்சத்திர பேச்சாளர்கள்
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் குஷ்பூ, நக்மா உள்பட 40 நட்சத்திர பேச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 8ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  தேர்தல் முடிவுகள் வருகிற பிப்ரவரி 11ந்தேதி வெளியிடப்படும்.

இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளும் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் வெளிவந்து உள்ளது.

இதில், சுபாஷ் சோப்ரா, பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல் மந்திரி கமல் நாத், பூபேஷ் பாகல், புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி, அஜய் மேக்கன், ஜே.பி. அகர்வால், மீரா குமார், கபில் சிபல், ராஜ் பாப்பர், முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர், ஹரீஷ் ராவத், புபீந்தர் சிங் ஹூடா, சத்ருகன் சின்ஹா, முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட், ரன்தீப் சிங் சுர்ஜீவாலா, கீர்த்தி ஆசாத், உதித் ராஜ், நதீம் ஜாவித், ரஞ்ஜீத் ரஞ்சன், குல்ஜீத் சிங் நாக்ரா, ராஜ் குமார் சவுகான், சுஷ்மிதா தேவ், பி.வி. ஸ்ரீனிவாஸ், நீரஜ் குந்தன், ஷர்மிஸ்தா முகர்ஜி, நக்மா மொரார்ஜி, ராகினி நாயக், குஷ்பூ சுந்தர், நிதின் ராவத் மற்றும் சாத்னா பாரதி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திறமையானவர்களை காங்கிரஸ் கட்சி வளர விடுவதில்லை - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
திறமையானவர்களை காங்கிரஸ் கட்சி வளர விடுவதில்லை என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
2. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு - காங். தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...