சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு மீண்டும் வேலை


சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு மீண்டும் வேலை
x
தினத்தந்தி 22 Jan 2020 9:16 PM GMT (Updated: 22 Jan 2020 9:16 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் மீது ஒரு பெண் ஊழியர் பாலியல் புகார் கூறினார். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி இந்த புகாருக்கான ஆதாரம் இல்லை என்று கூறியது. இதற்கிடையே அரியானாவை சேர்ந்த நவீன்குமார் என்பவர் அந்த பெண் ஊழியர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் வாங்கியதாக போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்ததால் அந்த பெண் ஊழியர் முதலில் இடமாறுதல் செய்யப்பட்டார். பின்னர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி கோர்ட்டு நவீன்குமார் வழக்கை நடத்த விரும்பவில்லை என்று கூறியதால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கை முடித்துவைத்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண் ஊழியருக்கு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் அதே பணி வழங்கப்பட்டது. அவருக்கான நிலுவை தொகைகளும் வழங்கப்பட்டன. அவர் பணியில் இணைந்துவிட்டு, விடுமுறையில் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story