தேசிய செய்திகள்

‘அட்லஸ் சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி தற்கொலை - டெல்லி வீட்டில் தூக்கில் தொங்கினார் + "||" + Atlas Cycle Company's wife commits suicide - Hanging in Delhi's house

‘அட்லஸ் சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி தற்கொலை - டெல்லி வீட்டில் தூக்கில் தொங்கினார்

‘அட்லஸ் சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி தற்கொலை - டெல்லி வீட்டில் தூக்கில் தொங்கினார்
அட்லஸ் சைக்கிள் நிறுவன அதிபரின் மனைவி, டெல்லி உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
புதுடெல்லி,

70 ஆண்டுகள் பழமையான பிரபல ‘அட்லஸ் சைக்கிள்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய்கபூர். இவரது மனைவி நடாஷ் கபூர் (வயது 57). இவர் டெல்லி அவுரங்கசீப் லேன் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் நடாஷ் கபூர் சாப்பிடுவதற்கு தனது அறையில் இருந்து வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை தேடினர். அப்போது அவரது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். உடனே குடும்பத்தினர் அவரை கீழே இறக்கிவிட்டு, டாக்டரை வீட்டுக்கு வரவழைத்தனர். டாக்டர் அவரை பரிசோதனை செய்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.


இதுபற்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர் தற்கொலை செய்யும் முன்பு எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலை என தெரிந்தாலும், அவரது அறைக் கதவு திறந்தே இருந்ததால் சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல நிதி பிரச்சினை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.