காங்கிரஸ் கட்சியை ‘முஸ்லிம் லீக் காங்கிரஸ்’ என அழைக்கும் பா.ஜனதா ‘நாதுராம் கோட்சே கட்சி’ என காங்கிரஸ் பதிலடி


காங்கிரஸ் கட்சியை ‘முஸ்லிம் லீக் காங்கிரஸ்’ என அழைக்கும் பா.ஜனதா ‘நாதுராம் கோட்சே கட்சி’ என காங்கிரஸ் பதிலடி
x
தினத்தந்தி 22 Jan 2020 9:48 PM GMT (Updated: 22 Jan 2020 9:48 PM GMT)

காங்கிரஸ் கட்சியை ‘முஸ்லிம் லீக் காங்கிரஸ்’ என அழைக்கும் பா.ஜனதா, ‘நாதுராம் கோட்சே கட்சி’ என காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

புதுடெல்லி,

மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சியமைக்கக்கூடாது என முஸ்லிம்கள் விரும்பியதால்தான், அங்கு சிவசேனாவுக்கு ஆதரவு கொடுத்தோம் என அந்த மாநில காங்கிரஸ் மந்திரி அசோக் சவான் கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது. இதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘முஸ்லிம்களுக்காக மராட்டிய அரசில் இணைந்ததாக காங்கிரஸ் தலைவர் கூறுகிறார். அப்படியானால் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டவர்கள் என்ன பாவம் செய்தனர்? இதன் மூலம் இந்துக்களை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டது’ என்று கூறினார்.

மேலும், முஸ்லிம்களை திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியை, முஸ்லிம் லீக் காங்கிரஸ் என அழைக்க வேண்டும் என்றும் சம்பித் பத்ரா தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் செர்கில் கூறுகையில், ‘பொருளாதார நிலைமை, பா.ஜனதாவின் தேசவிரோத மனப்பான்மை, பொருளாதார சீரழிவில் பாராமுகம் ஆகியவற்றை பார்க்கும்போது, பா.ஜனதாவுக்கு 3 பெயர்களை காங்கிரஸ் வைத்திருக்கிறது. அவை ‘நாதுராம் கோட்சே கட்சி’, ‘ஊழல்-வெற்று வாக்குறுதிகள் கட்சி’ மற்றும் ‘மக்களை மயக்கும் கட்சி’ ஆகியவை ஆகும்’ என்று கூறினார்.


Next Story