71 ஆயிரம் பல்குத்தும் குச்சிகளை கொண்டு தேசிய கொடியை உருவாக்கிய ஆசிரியர்


71 ஆயிரம் பல்குத்தும் குச்சிகளை கொண்டு தேசிய கொடியை உருவாக்கிய ஆசிரியர்
x
தினத்தந்தி 23 Jan 2020 8:38 AM GMT (Updated: 23 Jan 2020 8:38 AM GMT)

பஞ்சாப்பில் 71 ஆயிரம் பல்குத்தும் குச்சிகளை கொண்டு நாட்டின் தேசிய கொடியை பள்ளி ஆசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

அமிர்தசரஸ்,

நாட்டில் 71வது குடியரசு தினம் வருகிற 26ந்தேதி இந்தியா முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட உள்ளது.  இதனை முன்னிட்டு குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் வசித்து வருபவர் பல்ஜீந்தர் சிங்.  அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  இவர் குடியரசு தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு தனது கைவண்ணத்தில் தேசிய கொடி ஒன்றை உருவாக்கி உள்ளார்.

இதுபற்றி கூறும் அவர், 71வது குடியரசு தினத்தினை முன்னிட்டு 71 ஆயிரம் பல்குத்தும் குச்சிகளை கொண்டு தேசிய கொடி ஒன்றை உருவாக்கி உள்ளேன்.  இதனை செய்து முடிக்க எனக்கு 40 நாட்கள் தேவைப்பட்டன என்று கூறியுள்ளார்.

Next Story