குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 10 வரிகள் பேசுங்கள் - ராகுல்காந்திக்கு பாஜக சவால்


குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 10 வரிகள் பேசுங்கள் - ராகுல்காந்திக்கு பாஜக சவால்
x
தினத்தந்தி 24 Jan 2020 6:30 AM GMT (Updated: 24 Jan 2020 6:30 AM GMT)

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி ராகுல்காந்தி தொடர்ந்து பத்து வரிகள் பேசிவிட்டால் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கான ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கான சட்டம். அதனால் இந்த சட்டம் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்ல” என்றார்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி குறித்து அவர் பேசியதாவது;-

“குடியுரிமை குறித்து இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் கட்சி அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுகளால் தான் இந்தியா கடந்த பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது மக்களுக்கான சட்டம்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து 10 வரிகள் பேசட்டும். அவ்வாறு பேசி விட்டால் அவர் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.

Next Story