அனைவரும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நடைமுறையை கொண்டு வந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி; பிரதமர் மோடி


அனைவரும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நடைமுறையை கொண்டு வந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 25 Jan 2020 6:32 AM GMT (Updated: 25 Jan 2020 6:32 AM GMT)

அனைவரும் பங்கேற்கும் வகையிலான தேர்தல் நடைமுறையை கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி நன்றிகளை தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ந்தேதி குடியரசானது.  அதற்கு ஒரு நாள் முன்பு 1950ம் ஆண்டு ஜனவரி 25ந்தேதியில் இருந்து நாட்டில் தேர்தல் ஆணையம் செயல்பட தொடங்கியது.  இதனிடையே, ஜனவரி 25ந்தேதியை கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் ஆணையம், தேசிய வாக்காளர் தினம் ஆக கொண்டாடி வருகிறது.

இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட பிரதமர் மோடி, இதுபற்றி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நம்முடைய தேர்தல் நடைமுறையை பல்வேறு முயற்சிகளால் ஆற்றல் நிறைந்த மற்றும் அனைவரும் பங்கேற்க கூடிய வகையில் உருவாக்கிய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன் என தெரிவித்து உள்ளார்.

ஜனநாயகத்தினை வலிமை அடைய செய்யும், வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் வாக்கு சதவீதம் ஆகியவற்றை அதிகரிக்கும் நோக்கில் மக்கள் பணியாற்றுவதற்கு இந்த நாளானது அவர்களிடம் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Next Story