இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்


இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 25 Jan 2020 10:24 AM GMT (Updated: 25 Jan 2020 10:24 AM GMT)

இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால்  இதுவரை 26 பேர் பலியாகி இருந்தனர்.  இந்நிலையில், இன்று காலை வரை ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.  இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.  பலியானோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.  அவர்களில் 11 பேர் ஆண்கள்.  4 பேர் பெண்கள்.  

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும்,  அத்தியாவசியமற்ற சீனப்பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை புனே மருத்துவத் துறை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே  சீனாவில் இருந்து கேரளா திரும்பிய இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரில் ஒருவர், ஐதராபாத்தில் ஒருவர் என 11 பேர் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story