குடியுரிமை சட்ட போராட்டத்தில் வன்முறை: 154 பிரபலங்கள் ஜனாதிபதியிடம் மனு


குடியுரிமை சட்ட போராட்டத்தில் வன்முறை: 154 பிரபலங்கள் ஜனாதிபதியிடம் மனு
x
தினத்தந்தி 25 Jan 2020 7:10 PM GMT (Updated: 25 Jan 2020 7:10 PM GMT)

குடியுரிமை சட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, 154 பிரபலங்கள் ஜனாதிபதியிடம் மனு அளித்தனர்.

புதுடெல்லி,

மத்திய நிர்வாக தீர்ப்பாய தலைவரும், முன்னாள் நீதிபதியுமான பெர்மோத் கோலி தலைமையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 154 முக்கிய பிரமுகர்கள், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.

அப்போது, ஜனாதிபதியிடம் ஒரு மனு அளித்தனர். அதில், “குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள், சில அரசியல் சக்திகளால் தூண்டிவிடப்படுகின்றன. அந்த போராட்டங்களின் பெயரில் வன்முறையும் நடக்கிறது. அதில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story