தேசிய செய்திகள்

குடியரசு தின விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தின் 17 அடி உயரம் கொண்ட அய்யனார் சிலை! + "||" + Rajpath to witness the 71st RepublicDay parade

குடியரசு தின விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தின் 17 அடி உயரம் கொண்ட அய்யனார் சிலை!

குடியரசு தின விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தின் 17 அடி உயரம் கொண்ட அய்யனார் சிலை!
குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
புதுடெல்லி,

இன்று 71வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் 16 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பில் அய்யனார் கோவில் திருவிழாவை விளக்கும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழர்களின் காவல் தெய்வமாக கருதப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டது.

17 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலை, அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் அய்யனார் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனம் என வண்ணமயமாக வந்த தமிழகத்தின் அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் குடியரசு தின விழா கோலாகலம் : கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடி ஏற்றினார்
தூத்துக்குடியில் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடி ஏற்றினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடந்தது.
2. குடியரசு தின விழாவை முன்னிட்டு காஞ்சீபுரத்தில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
நாட்டின் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் பா.பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.
3. திருவண்ணாமலையில் நடந்த குடியரசு தின விழாவில் ரூ.6¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் - தேசிய கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் வழங்கினார்
திருவண்ணாமலையில் நடந்த குடியரசு தின விழாவில் ரூ.6¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கந்தசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து வழங்கினார்.
4. குடியரசு தின விழாவில் மந்திரியின் ‘ஷூ’வை எடுத்து வைத்த நபர்: வீடியோ வெளியானதால் சர்ச்சை
குடியரசு தின விழாவில் மந்திரியின் ‘ஷூ’வை எடுத்து வைத்த நபரின் வீடியோ வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது.
5. குடியரசு தின விழா: மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு
குடியரசு தினவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.