தேசிய செய்திகள்

பாகிஸ்தான் விமான படை விமானி மகனான பாடகர் அட்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருதா? - காங்கிரஸ் போர்க்கொடி + "||" + Pakistani Air Force pilot son Adnan Sami receives Padma Shri award - Congress attack

பாகிஸ்தான் விமான படை விமானி மகனான பாடகர் அட்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருதா? - காங்கிரஸ் போர்க்கொடி

பாகிஸ்தான் விமான படை விமானி மகனான பாடகர் அட்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருதா? - காங்கிரஸ் போர்க்கொடி
பாகிஸ்தான் விமான படை விமானி மகனான பாடகர் அட்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருது கொடுப்பதா என காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
புதுடெல்லி,

பாகிஸ்தான் விமான படை விமானியாக இருந்தவர் அர்ஷாத் சமிகான். இவரது மகன், இந்தி பாடகர் அட்னன் சமி. இவர் லண்டனில் பிறந்தவர்.

இந்திய குடியுரிமை கோரி 2015-ம் ஆண்டு விண்ணப்பித்தார். 2016-ம் ஆண்டு, இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.


பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டுள்ள இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இதையொட்டி அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறியதாவது:-

கார்கில் போரில் இந்தியாவுக்காக சண்டை போட்டவர் முன்னாள் ராணுவ அதிகாரி முகமது சனவுல்லா. ஆனால் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கு பின்னர், இவர் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்தியாவுக்கு எதிராக சண்டை போட்ட குடும்பத்தை சேர்ந்த அட்னன் சமிக்கு பத்ம ஸ்ரீ விருது தந்து கவுரவிப்பதா? இது எந்த விதத்தில் சரியானது? என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க பாகிஸ்தானுக்கு உதவும் சீன வாத்துப்படை
பாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க சீனா வாத்துப்படையை அனுப்ப உள்ளது.
2. பாகிஸ்தானில் இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
பாகிஸ்தானில் இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
3. பாகிஸ்தானில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 6 பேர் பலி: 3 பேர் காயம்
பாகிஸ்தானில் பலூஸ்சிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
4. பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
5. பாகிஸ்தானில் குவாரியில் பாறை சரிந்து 8 பேர் சாவு
பாகிஸ்தானில் குவாரியில் பாறை சரிந்து 8 பேர் உயிரிழந்தனர்.