குடியரசு தின விழாவில் மந்திரியின் ‘ஷூ’வை எடுத்து வைத்த நபர்: வீடியோ வெளியானதால் சர்ச்சை


குடியரசு தின விழாவில் மந்திரியின் ‘ஷூ’வை எடுத்து வைத்த நபர்: வீடியோ வெளியானதால் சர்ச்சை
x
தினத்தந்தி 26 Jan 2020 8:07 PM GMT (Updated: 26 Jan 2020 8:07 PM GMT)

குடியரசு தின விழாவில் மந்திரியின் ‘ஷூ’வை எடுத்து வைத்த நபரின் வீடியோ வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது.

புவனேசுவரம்,

ஒடிசா மாநிலம் கியோன்ஜார் நகரில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், அந்த மாநில வர்த்தக மற்றும் போக்குவரத்து துறை மந்திரி பத்மநாப பெகரா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். கொடி ஏற்றி முடித்து விட்டு அவர் தனது ‘ஷூ’வை அணிவதற்காக வந்த போது, அதை ஒருவர் எடுத்து வைப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ஆனால் ‘ஷூ’வை எடுத்து வைத்த நபர் யார்? என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த வீடியோ காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த மந்திரி பத்மநாப பெகரா, தேசிய கொடிக்கு மரியாதை அளிக்கும் வகையில் கொடி ஏற்றும் போது தனது ‘ஷூ’க்களை கழற்றி வைத்ததாகவும், மீண்டும் அணிவதற்காக வந்த போது தனது ‘ஷூ’வை யாரும் எடுத்து வைக்கவில்லை என்றும் கூறினார்.

Next Story