குடியரசு தினவிழாவில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட காங்கிரஸ் தலைவர்கள்


குடியரசு தினவிழாவில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட காங்கிரஸ் தலைவர்கள்
x
தினத்தந்தி 26 Jan 2020 8:16 PM GMT (Updated: 26 Jan 2020 8:16 PM GMT)

குடியரசு தினவிழாவில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட காங்கிரஸ் தலைவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் முதல்-மந்திரி கமல்நாத் தேசியகொடி ஏற்றி வைத்தார். இவர் விழாவுக்கு வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு அங்கு காங்கிரஸ் தலைவர்கள் இருவர் மோதலில் ஈடுபட்டனர். அங்கு விழாவுக்காக போடப்பட்டிருந்த மேடையில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சந்திரகிராந்த் குஞ்சீர் ஏறுவதற்கு முயன்றார். இதற்கு மூத்த தலைவர் தேவேந்திர சிங் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே இருவரும் ஒருவரையொருவர் பலமாக தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொண்டர்களும், போலீசாரும் இணைந்து அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர். பின்னர் முதல்-மந்திரி வந்தபின் விழா சுமுகமாக நடந்து முடிந்தது. எனினும் இந்த சம்பவம் காங்கிரசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story