தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 15 பேருக்கு கொலை மிரட்டல் + "||" + Kumaraswamy, 15 others, including actor Prakashraj, killed in Karnataka

கர்நாடகத்தில் குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்

கர்நாடகத்தில் குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்
கர்நாடகத்தில் குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 15 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக நேற்று முன்தினம் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இந்த நிலையில் குமாரசாமி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சேத்தன், மடாதிபதி நிஜகுனநந்தா சுவாமி உள்பட 15 பேரை தீர்த்துக்கட்டுவதாக ஒரு கொலை மிரட்டல் கடிதம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட 15 பிரபலங்களை கொலை செய்வதாக கையெழுத்து இல்லாத ஒரு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கர்நாடக அரசு தீவிரமாக கருதி, விசாரணை நடத்தி கடிதம் எழுதியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் மேலும் 10 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பு
அதிருப்தி எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ள நிலையில் கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
2. கர்நாடகத்தில் பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீர் போர்க்கொடி: முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி
மந்திரி பதவி கேட்டு பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளதால் கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
3. கர்நாடகா: பிப்ரவரி 6-ம் தேதி அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் - எடியூரப்பா
கர்நாடகாவில் பிப்ரவரி 6-ம் தேதி அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
4. கர்நாடகாவில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக போராட்டம் - விவசாயிகள் கைது
கர்நாடகாவில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி, தங்கள் எதிர்ப்பை காட்ட விவசாயிகள் திட்டமிட்டு இருந்தனர்.
5. பெங்களூரு முழுவதும் நாளை முதல் வரும் 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
கர்நாடகாவில் தலைநகர் பெங்களூரு உள்பட பல இடங்களில் நாளை முதல் வரும் 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.