தேசிய செய்திகள்

சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல் + "||" + Continuous monitoring of the health of Indians living in China: Foreign Minister Jaishankar reported

சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல்

சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல்
சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

சீனா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை குறித்து கவலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்களின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதன்படி மத்திய அரசும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை மற்றும் நல்வாழ்வு குறித்து தலைநகர் பீஜிங்கில் உள்ள நமது தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதில் மேலும் தகவல்களுக்கு பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் டுவிட்டர் தகவல்களை பின்தொடருங்கள்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல ஹுபெய் மாகாணத்தின் உகான் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இந்தியர்கள் குறிப்பாக மாணவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறியுள்ள பீஜிங் இந்திய தூதரகம், இது தொடர்பாக சீன அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் இருந்து பெருந்துறை திரும்பிய மருத்துவ மாணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
சீனாவில் இருந்து பெருந்துறை திரும்பிய மருத்துவ மாணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2. சீனாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவு
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சின்ஜியாங்கில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது.
3. சீனாவை தொடர்ந்து தென்கொரியாவை மிரட்டும் கொரோனா வைரஸ்
சீனாவை தொடர்ந்து, தென்கொரியாவை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. அங்கு ஒரே நாளில் 100 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்துள்ளது.
5. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி திரும்பிய 32 பேர் தொடர்ந்து கண்காணிப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி திரும்பிய 32 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-