தேசிய செய்திகள்

புலியிடம் சிக்கியவர்... சாமர்த்தியமாக உயிர் தப்பினார்...!! வீடியோ + "||" + Watch: Caught By A Tiger, Man's Hair-Raising Escape In Maharashtra

புலியிடம் சிக்கியவர்... சாமர்த்தியமாக உயிர் தப்பினார்...!! வீடியோ

புலியிடம் சிக்கியவர்... சாமர்த்தியமாக உயிர் தப்பினார்...!! வீடியோ
புலியிடம் சிக்கிய ஒருவர் சாமர்த்தியமாக உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
மும்பை

வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் புலியிடம் சிக்கிய ஒருவர் சாமர்த்தியமாக உயிர் தப்பிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது. 

மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு வயல்வெளிக்குள் கடந்த சனிக்கிழமை புலி ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் அதனை விரட்டி உள்ளனர். அதில் ஒருவரை சுற்றிவளைத்த புலி அவரைத் தாக்க சந்தர்ப்பம் பார்த்தது. சிக்கிக் கொண்ட நபரோ மிக சாமர்த்தியமாக தரையோடு தரையாக அசையாமல் அப்படியே படுத்து விட்டார். நபர் அசைவற்று இருந்ததால் புலி அவர் அருகே அமர்ந்து காத்துக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட பொதுமக்கள் ஒன்றாகக் கூடி கூச்சலிடத் தொடங்கினர். சிலர் அருகே இருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து சத்தம் போட்டனர்.

இந்த  சத்தத்தை கேட்ட புலி, செய்வது அறியாமல் அப்படியே சற்று நேரம் அமர்ந்திருந்தது. தொடர்ந்து கூட்டத்தினர் அருகே வருவதை அறிந்த அந்தப் புலி, சாலையைக் கடந்து தெறித்து ஓடியது. அதன்பின் அந்த நபர் எழுந்து மிக இயல்பாக நடந்து செல்கிறார். இந்தக் காட்சியை கூடியிருந்த கூட்டத்தினர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.