தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து மீண்டும் முறையீடு + "||" + Nirbhaya case: Appeal against rejection of mercy petition

நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து மீண்டும் முறையீடு

நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து மீண்டும் முறையீடு
கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ், சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்துள்ளார்.
புதுடெல்லி,

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றவாளிகள் தரப்பில் இருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டதால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்ற நிலை உள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், ஜனாதிபதி தனது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பு வக்கீல் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, பிப்ரவரி 1-ம் தேதி யாராவது தூக்கிடப்படுவார்கள் என்றால் அதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியதோடு, இந்த மனுவை நீதிமன்ற பதிவேட்டில் சேர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சட்டரீதியான வாய்ப்புகளை  பயன்படுத்தி தண்டனையை தாமதப்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மரண தண்டனை நிறைவேற்றும் விதிமுறைகளில் மாற்றம் செய்யுமாறு மத்திய அரசு கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் கேட்டுக் கொண்டது.

தற்போதைய விதிகள் குற்றவாளிகள் சட்டத்துடன் விளையாடுவதற்கும், மரணதண்டனையை தாமதப்படுத்துவதற்கும் அனுமதிக்கிறது என்று மத்திய அரசு தனது மனுவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நிர்பயா வழக்கு ; மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை பிப்.11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
நிர்பயா வழக்கில் மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 11 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
2. நிர்பயா வழக்கு ;மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
நிர்பயா வழக்கில் மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
3. ‘நிர்பயா’ வழக்கு 4 பேரை தூக்கில் போட தடை விலகுமா? - டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு
நிர்பயா வழக்கு குற்றவாளிகளான 4 பேரை தூக்கில் போட தடை விலகுமா என்பது குறித்த டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
4. ‘நிர்பயா’ வழக்கில் குற்றவாளிகளை தூக்கில் போட தடை நீங்குமா? - மத்திய அரசின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
‘நிர்பயா’ வழக்கில் குற்றவாளிகளை தூக்கில் போட தடை நீங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான மத்திய அரசின் வழக்கை டெல்லி ஐகோர்ட்டு, நேற்று விடுமுறை நாள் என்றபோதும் விசாரித்து, தீர்ப்பை ஒத்தி வைத்தது.
5. நிர்பயா வழக்கு; 3வது குற்றவாளி ஜனாதிபதிக்கு கருணை மனு
நிர்பயா வழக்கில் 2 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 3வது குற்றவாளி ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்து உள்ளார்.