2ஜி வழக்கில் சி.பி.ஐ. மேல்முறையீடு - டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை


2ஜி வழக்கில் சி.பி.ஐ. மேல்முறையீடு - டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை
x
தினத்தந்தி 27 Jan 2020 6:30 PM GMT (Updated: 27 Jan 2020 6:07 PM GMT)

2ஜி வழக்கில் சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனு மீது டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

புதுடெல்லி,

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, முன்னாள் தொலைத்தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகுரா உள்ளிட்ட பலரும் மற்றும் சில நிறுவனங்களும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்து இருக்கிறது. இதேபோல் சி.பி.ஐ. மனுவுக்கு எதிராக ஆ.ராசா உள்ளிட்ட சிலரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், ஆ.ராசா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய ஆ.ராசா தரப்பு வக்கீல் அபிஷேக் சிங்வி, புதிய ஊழல் தடுப்பு சட்டத்தின்படி, சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனு பயனற்றது என்றார்.


Next Story