வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த சீன இளம்பெண்ணுக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பா? - கொல்கத்தா ஆஸ்பத்திரியில் அனுமதி


வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த சீன இளம்பெண்ணுக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பா? - கொல்கத்தா ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 27 Jan 2020 8:41 PM GMT (Updated: 27 Jan 2020 8:41 PM GMT)

வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த சீன இளம்பெண்ணுக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு குறித்த சந்தேகத்தால், கொல்கத்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா,

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஜுவா ஹுவாமின் (வயது 28). இவர் கடந்த 6 மாதங்களாக நமீபியா, மொரீஷியஸ், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விட்டு, கடந்த 24-ந் தேதி இந்தியாவுக்கு வந்தார்.

கொல்கத்தாவில் ஒரு ரெயிலில் சென்று கொண்டிருந்தபோது, உடல் வெப்பநிலை அதிகரித்ததால், அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை ‘கொரோனா’ வைரஸ் தாக்கி இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘கொரோனா’ வைரஸ் தாக்கி இருக்கிறதா என்பதை கண்டறிய பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

Next Story