தேசிய செய்திகள்

நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளியின் தந்தை மனு கோர்ட்டில் தள்ளுபடி + "||" + Nirbhaya Murder Case: Father of the accused dismissed by the petition

நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளியின் தந்தை மனு கோர்ட்டில் தள்ளுபடி

நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளியின் தந்தை மனு கோர்ட்டில் தள்ளுபடி
நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளியின் தந்தை கொடுத்த மனு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி,

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் தந்தை ஹீராலால் குப்தா டெல்லி கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், சம்பவம் நடந்த போது மாணவியுடன் இருந்த அவரது ஆண் நண்பர்தான் நேரில் பார்த்த ஒரே சாட்சி என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த மனு கடந்த 6-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.


அதை எதிர்த்து ஹீராலால் குப்தா கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று நீதிபதி ஏ.கே.ஜெயின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிர்பயா வழக்கு: குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க டெல்லி அரசு பரிந்துரை
நிர்பயா வழக்கில், குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க டெல்லி அரசு பரிந்துரை செய்துள்ளது.
2. தேனி காதல் ஜோடி கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேனி காதல் ஜோடி கொலை வழக்கில், குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.