இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாக மாறி உள்ளது -ராகுல்காந்தி குற்றச்சாட்டு


இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாக மாறி உள்ளது  -ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Jan 2020 10:02 AM GMT (Updated: 28 Jan 2020 10:02 AM GMT)

இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாக கருதப்படுகிறது என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியதாவது:-

பிரதமர் மோடி 2 கோடி வேலைகளை உறுதியளித்திருந்தார், ஆனால் கடந்த ஆண்டு நமது இளைஞர்கள் 1 கோடி பேர் வேலைகளை இழந்துள்ளனர். பிரதமர் எங்கு சென்றாலும் அவர் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவு பற்றி பேசுகிறார், ஆனால் வேலையின்மை பற்றிய மிகப்பெரிய  பிரச்சினையை  குறிப்பிடவில்லை, பிரதமர் அதில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இன்றும் கூட 8 வயது குழந்தையிடம் கேளுங்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கை  உங்களுக்கு பயனளித்ததா அல்லது உங்களுக்கு தீங்கு விளைவித்ததா? என்று குழந்தை தீங்கு விளைவித்தது என்று கூறும்.

ஆரம்பத்தில் நாம்  சீனாவுடன் போட்டியிட்டோம், ஆனால் இப்போது  சீனா நம்மை விட மிகவும் பின்தங்கி உள்ளது. சீனாவுக்கு போட்டியாக யாராவது இருக்கிறார்களா என்றால் முழு உலகிற்கும் தெரியும், அது இந்தியாவின் இளைஞர்கள் தான்.

உலகில் இந்தியா கொண்டிருந்த நற்பெயர் மற்றும் பிம்பம் என்னவென்றால், அது சகோதரத்துவம், அன்பு மற்றும் ஒற்றுமை கொண்ட நாடு என்று. அதே நேரத்தில் பாகிஸ்தான் வெறுப்புக்கும் பிளவுக்கும் பெயர் பெற்றது.  இந்தியாவின் இந்த  பிம்பத்தை நரேந்திர மோடி சீர்குலைத்து விட்டார். இன்று, இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாக கருதப்படுகிறது என கூறினார்.

Next Story