தேசிய செய்திகள்

5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + 71% increase in debt in 5½ years: The indictment of Congress

5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
நாட்டின் கடன் 5½ ஆண்டுகளில் 71 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வைத்துள்ளது.
புதுடெல்லி,

நாட்டின் கடன் 5½ ஆண்டுகளில் 71 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வைத்துள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கவுரவ் வல்லப், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-


நாட்டின் கடன் 2014 மார்ச் மாதம் ரூ.53.11 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது அது ரூ.91.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, கடன் ரூ.37.9 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இது 71.36 சதவீத உயர்வு ஆகும்.

ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் விகிதாசாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 சதவீதமாக இருந்தது, இப்போது இரு மடங்காக (10.3 சதவீதம்) உயர்ந்துள்ளது.

வருமானம் உயரவில்லை. வேலை வாய்ப்பு இல்லை. இப்படி கடன் உயர்ந்தால் எப்படி அந்த சுமையை தாங்கப்போகிறோம்? பாரதீய ஜனதா கட்சி அரசின் தோல்விக்காக இந்திய மக்கள் இந்த கடனை சுமக்க வேண்டுமா? பிரதமரும், நிதி மந்திரியும் இந்த கவலைக்கு வரும் பட்ஜெட்டில் தீர்வு காணுங்கள் என்று அவர் கூறினார்.