தேசிய செய்திகள்

அமைதியான நாடு என்ற இந்தியாவின் பெருமையை மோடி அழித்துவிட்டார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு + "||" + Modi has destroyed India's reputation as a peaceful nation: Rahul Gandhi alleges

அமைதியான நாடு என்ற இந்தியாவின் பெருமையை மோடி அழித்துவிட்டார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அமைதியான நாடு என்ற இந்தியாவின் பெருமையை மோடி அழித்துவிட்டார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அமைதி மற்றும் நல்லிணக்க நாடு என்ற இந்தியாவின் பெருமையை மோடி அழித்துவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் கோபம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


மோடி அரசு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதி அளித்தது. ஆனால் கடந்த ஆண்டு ஒரு கோடி பேர் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இளைஞர்கள் தங்கள் குரல் அடக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது. நாட்டின் எதிர்காலம் குறித்தும், வேலைவாய்ப்பு குறித்தும் இளைஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

பாகிஸ்தானுக்கு நேர்மாறாக, இந்தியா அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான நாடு என்று பெயர் பெற்றது. ஆனால் அந்த பெருமை இப்போது அழிக்கப்பட்டுவிட்டது. முதலீடுகள் தடுக்கப்படுகிறது. நரேந்திர மோடி இந்தியாவின் பெருமையையும், உலக நாடுகளிடம் இருந்த புகழையும் அழித்துவிட்டார்.

இந்தியா இப்போது கற்பழிப்பின் தலைநகரமாகிவிட்டது. ஆனால் நரேந்திர மோடி இதுபற்றி பேசமாட்டார். இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ, இந்தியாவின் பெருமையை ஏன் அழித்தீர்கள் என்றோ மோடியிடம் கேள்வி எழுப்பினால் உங்களுக்கு துப்பாக்கி குண்டுகள்தான் பதிலாக கிடைக்கும். உங்கள் குரல் அடக்கப்படும்.

இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மற்றும் வலிமை இளைஞர்கள்தான். இது சீனாவுடன் போட்டி போடும் அளவுக்கு உள்ளது. ஆனால் அரசு இந்த சொத்தை வீணடிக்கிறது என்று அவர் பேசினார்.

கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘தேசிய வேலையில்லாத இளைஞர்கள் பதிவேடு’ (என்.ஆர்.யு.) என்ற சுவரொட்டியை வெளியிட்டார். இதில் வேலை இல்லாத இளைஞர்கள் பதிவு செய்ய வேண்டும். அதன்மூலம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்ற தகவலை பிரதம மந்திரியிடம் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவுடனான உறவு மேம்படாது ; அப்ரிடி சொல்கிறார்
மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது என்று அப்ரிடி தெரிவித்துள்ளார்.
2. ‘விசா’ பிரச்சினை குறித்து டிரம்புடன் மோடி பேசவேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
எச்-1பி விசா பிரச்சினை குறித்து டிரம்புடன் பிரதமர் மோடி பேசவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது.
3. ஆமதாபாத்தில் டிரம்ப், மோடி செல்கிற கிரிக்கெட் மைதானத்தில் தற்காலிக ‘கேட்’ விழுந்தது
ஆமதாபாத்தில் டிரம்ப், மோடி செல்கிற கிரிக்கெட் மைதானத்தில் தற்காலிக ‘கேட்’ பலத்த காற்று காரணமாக விழுந்தது.
4. உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
5. "டெல்லி தேர்தலுக்கு முன் பேச வேண்டிய 3 விஷயங்கள்" -மோடிக்கு ப.சிதம்பரத்தின் ஆலோசனை
பிரதமர் மோடி டெல்லி தேர்தல் பிரசாரத்தில் மூன்று விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.