தேசிய செய்திகள்

டிரம்ப் குஜராத் வருகை: முதல்-மந்திரி தகவல் + "||" + Trump visits Gujarat: first-minister information

டிரம்ப் குஜராத் வருகை: முதல்-மந்திரி தகவல்

டிரம்ப் குஜராத் வருகை: முதல்-மந்திரி தகவல்
டிரம்ப் குஜராத் வர உள்ளதாக முதல்-மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் பிப்ரவரி 24, அல்லது 26-ந்தேதி இந்தியா வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய, அமெரிக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். விரைவில் சுற்றுப்பயண தேதி இறுதி செய்யப்படும்.


இதற்கிடையே குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றுப்படுகையை டிரம்ப் பார்வையிட உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி கூறியுள்ளார். டெல்லி சாஸ்திரி நகரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், ‘பிரதமர் நரேந்திரமோடியின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த ஆசிய கண்டத்திலேயே சுத்தமான ஆறாக சபர்மதி நதி விளங்குகிறது. ஜப்பான், இஸ்ரேல் நாட்டு பிரதமர்கள் இதனை பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் வருகிறார். அவரும் சபர்மதி ஆற்றுப்படுகையை பார்வையிடுகிறார்’ என்று குறிப்பிட்டார். ஆனால் டிரம்ப் வரும் தேதியை அவர் குறிப்பிடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிடுவதா? சமாஜ்வாடி கட்சி கண்டனம்
டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
2. டிரம்ப் விருந்து நிகழ்ச்சி; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிக்கப்போவதாக தகவல்
ஜனாதிபதி மாளிகையில் நாளை நடைபெறும் டிரம்பிற்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
3. ராஜகண்ணப்பன் தி.மு.க.வில் இணையும் விழா மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வருகை
மதுரையில் நடக்கும் விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.
4. பஞ்சாபில் முதல்-மந்திரியின் வீட்டுக்கு மின்சார வினியோகத்தை துண்டிப்போம் - ஆம் ஆத்மி மிரட்டல்
பஞ்சாபில் முதல்-மந்திரியின் வீட்டுக்கு மின்சார வினியோகத்தை துண்டிப்போம் என ஆம் ஆத்மி மிரட்டல் விடுத்தது.
5. டிரம்ப்பை வரவேற்க தயாராகும் மோடி அரசு
அமெரிக்க - இந்திய உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அமெரிக்காவின் முதல் குடும்பத்தை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது மோடி அரசு.