தேசிய செய்திகள்

இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரெயில்: 2022-ம் ஆண்டு கொல்கத்தாவில் இயக்கப்படும் + "||" + India's first underwater metro train: 2022 will be operated in Kolkata

இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரெயில்: 2022-ம் ஆண்டு கொல்கத்தாவில் இயக்கப்படும்

இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரெயில்: 2022-ம் ஆண்டு கொல்கத்தாவில் இயக்கப்படும்
நீருக்கு அடியில் செல்லும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரெயில் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தாவில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா,

இந்தியாவின் முதல் மெட்ரோ ரெயில் சேவை கொல்கத்தாவில் கடந்த 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, 10 இந்திய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை செயல்பாட்டில் உள்ளன.

கொல்கத்தா, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், ஜெய்ப்பூர், குர்கான், மும்பை, கொச்சி மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் மெட்ரோ சேவைகள் உள்ளன.


இந்த நிலையில் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் 16.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிழக்கு-மேற்கு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த வழித்தடம் கட்ட கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதில் 10.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை வழியே தான் மெட்ரோ ரெயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல் கொல்கத்தாவையும், ஹவுராவையும் இணைக்கும் வகையில், ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் 520 மீட்டர் நீளத்துக்கு 2 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு, அதன் வழியே மெட்ரோ ரெயில் விடவும் திட்டமிடப்பட்டது.

இதற்காக ஹூக்ளி ஆற்றுக்கு அடியில், 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி நடந்து வந்தது. கிழக்கு, மேற்கு என்று எதிரெதிர் திசைகளில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பல ஆண்டு தாமதத்திற்கு பிறகு வருகிற 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய செலவுத்தொகையான 14 கி.மீ.க்கு 4,900 கோடி ரூபாயில் இருந்து, 17 கி.மீ.க்கு சுமார் ரூ.8,600 கோடி என 2 மடங்காக உயர்ந்து உள்ளது.

இந்த திட்டத்திற்காக இந்திய ரெயில்வே வாரியம் அடுத்த 2 ஆண்டுகளில் கடைசி தவணைத் தொகையான ரூ.20 கோடியை வழங்கும் என்று கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் மனஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் இருந்து ரூ.4,160 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஹூக்ளி ஆற்றில் அமைய உள்ள இந்த புதிய ரெயில் பாதை மூலம் தினசரி சுமார் 9 லட்சம் பயணிகளை மெட்ரோ ரெயில்கள் ஏற்றிச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் டி20 கிரிக்கெட் ; நியூசிலாந்துக்கு 134 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்துக்கு இந்திய அணி 134 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
2. இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ ஒப்பந்தம்: டிரம்ப்-மோடி முன்னிலையில் கையெழுத்து
இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம், டிரம்ப், மோடி முன்னிலையில் கையெழுத்தானது.
3. இரு நாடுகளுக்கிடையே ஐந்து பிரிவுகளில் பேச்சுவார்த்தை ; சிஏஏ இடம்பெறவில்லை -வெளியுறவு செயலாளர்
இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையே ஐந்து முக்கிய பிரிவுகளில் பேச்சுவார்த்தை நடந்தன, குடியுரிமை திருத்த சட்டம் இடம்பெறவில்லை என வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
4. இந்தியாவுடன் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தம்: ஆமதாபாத் நிகழ்ச்சியில் டிரம்ப் அறிவிப்பு
ரூ.21 ஆயிரத்து 600 கோடி மதிப்புள்ள அதிநவீன ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று ஆமதாபாத் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் கூறினார்.
5. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா முதலில் பேட்டிங்
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.