தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தல் : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு + "||" + Delhi Assembly Election: Kamal Haasan support to Arvind Kejriwal

டெல்லி சட்டசபை தேர்தல் : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு

டெல்லி சட்டசபை தேர்தல் : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
டெல்லியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக, ஆளும் அரசான ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக டெல்லியின் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-

“கெஜ்ரிவாலை தலைவராக பின் தொடராதீர்கள். அவரை அப்படியே உள்வாங்கி  கொள்ளுங்கள். எனது தோளோடு தோள் நிற்கும் சகோதரர் கெஜ்ரிவாலுக்கு என்னுடைய வணக்கங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிலில் கூறியிருப்பதாவது, “நன்றி கமல் அவர்களே, டெல்லி முதல்வராக இருந்த ஐந்தாண்டு அனுபவத்தில் உணர்ந்தது என்னவென்றால் நமது நாட்டு மக்களை வேண்டும் என்றே கல்வி அறிவில்லாதவர்களாகவும்,  வறுமையானவர்களாகவும் கடந்த 70 ஆண்டுகளாக வைத்துள்ளனர். அரசிடம் பணம் இல்லை என்பது பொய்யான கருத்து. ஆட்சியாளர்களுக்கு நல்ல நோக்கம் வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி: கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. டெல்லி சட்டசபை தேர்தல்; ஆம் ஆத்மி-32, பா.ஜ.க.-16 முன்னிலை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
3. டெல்லி சட்டசபை தேர்தல்; 5 மணி நிலவரப்படி 44.52 சதவீத வாக்குகள் பதிவு
டெல்லி சட்டசபை தேர்தலில் 5 மணி நிலவரப்படி 44.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
4. டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
டெல்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
5. டெல்லி சட்டசபை தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் பிரசாரம் செய்ய 2 நாள் தடை - தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு
டெல்லி சட்டசபை தேர்தலில், பா.ஜனதா வேட்பாளர் பிரசாரம் செய்ய 2 நாள் தடை விதித்து தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.