தேசிய செய்திகள்

நரேந்திர மோடியும், நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தம் கொண்டவர்கள் -ராகுல் காந்தி + "||" + Nathuram Godse, Narendra Modi Believe In The Same Ideology - Rahul Gandhi

நரேந்திர மோடியும், நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தம் கொண்டவர்கள் -ராகுல் காந்தி

நரேந்திர மோடியும், நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தம் கொண்டவர்கள் -ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடியும், நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,

கேரள மாவட்டம் வயநாட்டில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நடைபெற்றது. இதில் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியும், நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தத்தை நம்புவதாக கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது;-

“ஒவ்வொரு மனிதரும் தங்களது சொந்த நம்பிக்கையைப் பின்பற்றுவது பற்றிய மகாத்மா காந்தியின் கருத்தை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவின் வலிமை என்னவென்று அவருக்கு தெரியாத அளவுக்கு அவர் மனம் கோபத்தால் நிறைந்துள்ளது.

நரேந்திர மோடியும் நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. பிரதமர் மோடி தான் கோட்சேவை நம்புவதாகக் கூற தைரியம் இல்லை என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்
இந்திய பயணத்தின் போது 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.