தேசிய செய்திகள்

வருகிற 7–ந்தேதி முதல் மகிந்த ராஜபக்சே இந்தியாவில் சுற்றுப்பயணம் + "||" + Coming from 7 - onwards Mahinda Rajapaksa tours India

வருகிற 7–ந்தேதி முதல் மகிந்த ராஜபக்சே இந்தியாவில் சுற்றுப்பயணம்

வருகிற 7–ந்தேதி முதல் மகிந்த ராஜபக்சே இந்தியாவில் சுற்றுப்பயணம்
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசுமுறை பயணமாக வருகிற 7–ந்தேதி இந்தியா வருகிறார்.

புதுடெல்லி, 

11–ந்தேதி வரை இங்கு தங்கியிருக்கும் அவர் டெல்லியில் பிரதமர் மோடி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அத்துடன் பல்வேறு இடங்களையும் அவர் சுற்றிப்பார்க்கிறார். அதன்படி காசி, சாரநாத், புத்த கயா, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார்.

இந்தியா–இலங்கை இடையே நெருங்கிய உறவுகள் நீடித்து வரும் நிலையில், ராஜபக்சேயின் இந்த பயணம் மூலம் இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.